WI vs IND 2nd ODI: ரோகித், கோலிக்கு ஓய்வு, சாம்சன், அக்ஷருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், அவர்களுக்க் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 தொடரை கருத்தில் கொண்டு சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல் ஆகியோருக்கும் இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா:
சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.
உலகக் கோப்பை 2023: சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த தேர்வு – ஆர்பி சிங்!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரோவ்மேன் பவால் மற்றும் டொமினிக் டிரேக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக, அல்ஸாரி ஜோசஃப், கீசி கார்டி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து போராடி 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்று சமனாகும்.