உலகக் கோப்பை 2023: சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த தேர்வு – ஆர்பி சிங்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறந்த தேர்வாக இருப்பார்கள் என்று முன்னாள் வீரர் ஆர்பி சிங் கூறியுள்ளார்.
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் 13ஆவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. உலகக் கோப்பை தொடரானது 10 மைதானங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3ஆவது வரிசையில் களமிறங்கி, 25 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், டி20 போட்டிகளில் சிறந்த வீரராக அறியப்படும் சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் சொதப்பி வருவது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அணி நிர்வாகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாண்டியாவிற்கு முதல் ஓவரா? ரோகித் சர்மாவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!
எனினும், காயம் காரணம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் முழு உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4ஆவது இடத்தில் களமிறங்கி விளையாட அவர் தான் சரியான தேர்வாக இருப்பார்.
இதே போன்று கேஎல் ராகுலும் 3 மற்றும் 4ஆவது வரிசையில் களமிறங்க போட்டி போடுறார். அவரும் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், உலகக் கோப்பைக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஆர் பி சிங், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இந்த இருவர் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
ஒருநாள் தொடரிலிருந்து விலகிய முகமது சிராஜ்? ஏன், என்ன காரணம் தெரியுமா?
ஷ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக இருந்தால் சூர்யகுமார் யாதவ் உடன் நம்பர் 4ல் விளையாட சரியாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் இதுவரையில் விளையாடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 452 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆதலால், அவர் தனது சிறப்பான ஆட்டத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சொதப்பினால், அவருக்குப் பிறகு சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?
நம்பர் 4ல் களமிறங்கும் வீரர்கள் அணிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக வந்தால் அவர் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார். அதுவரையில் சூர்யகுமார் யாதவ் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆர் பி சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.