ஓய்வு முடிவை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்: 17 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு எண்ட்கார்டு!
ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போடி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. இதே போன்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 12 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
விராட் கோலிக்கு பிரேஸ்லெட் பரிசாக அளித்த ரசிகை: வைரலாகும் வீடியோ!
இதில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலமாக இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய 4ஆம் நாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த நிலையில், 3ஆம் நாள் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நாளை அல்லது நாளை மறுநாள் அதாவது திங்கள் கிழமை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி நாள் போட்டியாக இருக்கப் போகிறது. இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிந்து கொள்வதை பெருமையாகவே கருதினேன். இந்த ஆஷஸ் தொடரை ரொம்பவே மகிழ்ச்சியுடன் விளையாடினேன்.
விட்டு விட்டு மழை; மீண்டும் வேலயை காட்டிய மைதானம்; இந்தியா 181க்கு ஆல் அவுட்!
நேற்று இரவு தான் ஓய்வு முடிவு எடுத்தேன். ஆனால், அதற்கு முன்னதாக சில வாரங்களாக அதைப் பற்றி யோசித்து வந்தேன். ஆஸ்திரேலியா சவால் நிறைந்த ஒரு அணி. ஆஷஸ் தொடரில் தான் எனது கடைசி பவுலிங் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது ஓய்வு முடிவு குறித்து நேற்று இரவு தான் பென் ஸ்டோக்ஸிடமும், இன்று காலை தான் சக வீரர்களிடமும் கூறினேன். ஆனால், ஓய்வு முடிவு அறிவிக்கும் வரையில் அரைமனதாக இருந்தேன் என்று கூறியுள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பாக ஆடிய சுப்மன் கில், இஷான் கிஷான் அரைசதம்: மழையால் போட்டி பாதிப்பு!