தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?
தோனியின் மூத்த சகோதரியான ஜெயந்தி குப்தா, அவரது நண்பரான கௌதம் குப்தாவை திருமணம் செய்திருக்கிறார்.
இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார். தோனியின் வாழ்க்கையில் அவரது அடைந்த வெற்றிக்கு அவரது மூத்த சகோதரி ஜெயந்தி குப்தாவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!
இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் மூலமாக வருத்திற்கு ரூ.50 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். தோனி கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாக அவரது குடும்பம் மிகவும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்ததாக இருந்தது. அவரது தந்தை பான் சிங் நடுத்தர அளவிலான அரசு வேலையில் பணிபுரிந்தார்.
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
ஜெயந்தி குப்தா, தோனியின் மூத்த சகோதரி. தோனிக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்து அவருக்கு ஆதரவாக இருந்தார். பான் சிங்கிற்கு தோனி கிரிக்கெட் விளையாட நம்பிக்கை இல்லாத போது தோனிக்கு ஆதரவாக ஜெயந்தி குப்தா இருந்தார். என்னதான் தோனிக்கு ரூ.1040 கோடி வருமானம் வந்தாலும், அவரது சகோதரி சுயவிவரம் காரணமாக ஊடகங்களிலிருந்து விலகி இருக்கவே முயற்சிக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
தோனியின் நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணந்துள்ளார். கௌதம் குப்தா, தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். ஆரம்பகாலத்தில் தோனிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!