Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின் போது நடுவரது தவறான முடிவால் ஆத்திரமடைந்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஸ்டெம்பை அடித்து நொறுக்கினார். அதுமட்டுமின்றி போட்டிக்கு பின், நடுவர் குறித்தும் விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஐசிசி விதிமுறையின்படி 75 சதவிகிதம் போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டது.
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
அதோடு, வரும் 2 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. வங்கதேச தொடரை முடித்த இந்திய மகளிர் அணி அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஐசிசி மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலில் 46 போட்டிகளில் விளையாடி 12,186 புள்ளிகளுடன் 265 ரேட்டிங் பெற்றதன் காரணமாக ஹர்மன்ப்ரீத் கவுர் அண்ட் கோ கான்டினென்டல் கேம்ஸில் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
ஆனால் நன்னடத்தை காரணமாக 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் பதிலாக இந்திய மகளிர் அணியை ஸ்மிருதி மந்தனா வழிநடத்த உள்ளார். செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 7 வரை ஹாங்சோவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் டீம் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மந்தனா தலைமையிலான இந்திய அணிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!
கடந்த 2 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி எந்த ஐசிசி டிராபியையும் கைப்பற்றவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தற்போது நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் இல்லாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, T20 உலகக் கோப்பையின் அரையிறுதியை எட்டியது, மேலும் 2022ல் 50 ஓவர் உலகக் கோப்பையின் கடைசி நான்கு நிலைகளுக்கு தகுதி பெறவில்லை.
ஹோம் சீசனில் புறக்கணிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்!
இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி டிராபியை கைப்பற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால், இந்த முறை மந்தனா தலைமையிலான இந்திய அணி கவுர் இல்லாமல் 2 நாக் அவுட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 மார்ச் வரையில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய அணி: ஹோம் சீரிஸ் அட்டவணை வெளியீடு!