2 கிலோ பிரியாணியில் தோனியின் ஓவியம்: சிஎஸ்கே டிராபியை கைப்பற்ற வேண்டும்!

2 கிலோ பிரியாணியில் வரையப்பட்ட தோனியின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CSK Skipper MS Dhoni Biryani Art Drawing viral in social media

ஐபிஎல் 2023ன் இறுதிப்போட்டி நேற்று நடக்க இருந்த நிலையில், மழை காரணமாக இன்று மாற்றப்பட்டது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க நிலையில் இன்று மாற்றப்பட்டது. இன்றைய போட்டியிலும் மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

டெல்லியில் அத்துமீறிய காவல்துறை: மல்யுத்த வீரர்களை துன்புறுத்தி கைது செய்யும் வீடியோ!

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றி பெற வேண்டும் என்பதை குறிப்பிட்ட பிரபல ஓவியர் வரைந்த தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாகத்தைச் சேர்ந்தவர் அறிவழகி. இவர் தேச தலைவர்களின் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.

வரலாற்றில் மறக்க முடியாத டே: முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் சாம்பியனான நாள் இன்று!

அந்த வகையில் தான் ஐபிஎல் இறுதிப்போட்டியை சுட்டிக்காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதை குறிப்பிட்டு 2 கிலோ பிரியாணியில் தோனியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னிக்கும் மழை பெய்தால் குஜராத் டைட்டன்ஸ்-க்கு தான் சாம்பியன்; சென்னைக்கு வாய்ப்பில்லை!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios