துபாயில் நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2024 ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது.
பேட் கம்மின்ஸை ஓவர்டேக் செய்து வரலாற்றை மாற்றி அமைத்து ரூ.24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்!
இவரைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூரை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பக்கம் இழுத்துக் கொண்டது. அவர் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடிய ஷர்துல் தாக்கூர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணிக்காக ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.10.75 கோடிக்கு விளையாடினார்.
IPL 2024 Auction: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.20.50 கோடிக்கு விலை போன பேட் கம்மின்ஸ்!
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் சென்னை அணிக்கு ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர்களது வரிசையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 20 வயதான இளம் வீரர் ஒருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி ஒரு வீரரை ஏலம் எடுக்கிறது என்றால் அவர் எப்படிப்பட்ட வீரராக இருப்பார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
IPL Auction 2024, Dubai: ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூரை தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
யார் அந்த 20 வயது வீரர் என்று பார்த்தால், உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டி நடந்தது. டிஎன்பிஎல் தொடர் போன்று நடந்த இந்த தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக சமீர் ரிஸ்வி விளையாடினார். இதில், அவர் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆனால், அப்போது 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உத்தரப்பிரதேச் அணி தேர்வு நடந்தது. இதில், சமீர் ரிஸ்வி பங்கேற்றார். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஒரு நாள் போட்டியில் உத்தரப்பிரதேச அணி சார்பில் விளையாடிய சமீர் ரிஸ்வி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 65 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதே போன்று ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
IPL Auction 2024, Rovman Powell: முதல் வீரராக ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!
இந்த தொடரில் மட்டுமே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலமாக இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்டு பேட்டருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிர்ணயித்ததோ ரூ.20 லட்சம் தான். இவரை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியாக சிஎஸ்கே ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
டேரில் மிட்செல் - நியூசிலாந்து - ஆல்ரவுண்டர் – ரூ.14 கோடி
சமீர் ரிஸ்வி – இந்தியா – பேட்ஸ்மேன் – ரூ.8.40 கோடி
ஷர்துல் தாக்கூர்- இந்தியா – ஆல்ரவுண்டர் – ரூ.4 கோடி
ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.1.80 கோடி
