துபாயில் நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வெலல் காரணமான டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் தற்போது துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்துகிறார்.

IPL Auction 2024, Rovman Powell: முதல் வீரராக ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!

இந்த ஏலத்தின் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.1 கோடி. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.2.80 கோடிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2024 Auction Dubai: காவ்யா மாறன் கொடுக்கிற எக்‌ஷ்பிரஷன பாத்த நமக்கு டென்ஷனாகியிருது - ரஜினி வீடியோ வைரல்!

இரண்டாவதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி ஃப்ரூக் ஏலம் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஃப்ரூக் ரூ.4 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் ஒவ்வொருவரும் அதிகம் எதிர்பார்த்த டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவில் நடந்த 13ஆவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட் தான். இவர் அடித்த சதம் ஆஸ்திரேலியாவை 6ஆவது முறையாக சாம்பியானாக்கியது.

இதன் காரணமாக டிராவிஸ் ஹெட் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.6.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையில் கடும் போட்டி நிலவிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டிராவிஸ் ஹெட்டை தட்டி தூக்கியுள்ளது. முதல் வீரரையே முத்தான வீரரை ஹைதராபாத் ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL Auction 2024: அணியின் பர்ஸ் தொகை, எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள், ஏலம் நடத்துபவர் யார்?