மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. 

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. 16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: தனி ஒருவனாய் அரைசதம் அடித்து மும்பை இந்தியன்ஸை கரைசேர்த்த திலக் வர்மா..! ஆர்சிபிக்கு சவாலான இலக்கு

இதை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் பாஃப் டு பிளெசீ மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் பேட்டிங் செய்தனர். இருவரும் சேர்ந்து அபார ஆட்டைத்தை வெளிப்படுத்தி மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். மிக அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து 100 ரன் பார்ட்னர்ஷிப்பை தாண்டி சென்றனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாஃப் டு பிளெசீ 43 பந்துகளில் 73 ரன்களை ஐந்து பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் எடுத்து அர்ஷத் கான் பந்து வீச்சில் டேவிட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!

இதை அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் கேமரா பந்து வீச்சில் திலக் வர்மா இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து 12 ரன்கள் எடுக்க, 16.2வது ஓவரில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸர் அடித்து விராட் கோலி ஆட்டத்தை முடித்து வைத்தார். விராட் கோலி 49 பந்துகளில் ஆறு பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.