ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, திலக் வர்மாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹல் வதெரா, ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான். 

IPL 2023: இந்தியாவின் முதல் பவுலர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரன் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளி, முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (1) மற்றும் இஷான் கிஷன் (10) ஆகிய் இருவரும் ஏமாற்றமளித்தனர். ரோஹித் சர்மா 10 பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேமரூன் க்ரீன் 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் டிம் டேவிட் (4), ரித்திக் ஷோகீன்(5) ஆகியோர் ஒருமுனையில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி தனி ஒருவனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக போராடி பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொதப்ப, திலக் வர்மா மட்டும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 46 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்..! பிளேயர்ஸ் மீது ரிக்கி பாண்டிங் செம காட்டம்

நெஹல் வதேரா 13 பந்தில் 21 ரன்களும், அர்ஷத் கான் 9 பந்தில் 15 ரன்களும் அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 171 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.