ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை வெல்வோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.

Scroll to load tweet…

கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்திற்கு வரவேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு சென்ற ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பாக ரூ.11 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த மகாராஷ்டிரா அரசு எங்களை கௌரவிக்கவில்லை – சிராக் ஷெட்டி!

இந்த நிலையில் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியை ரோகித் சர்மா,விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு அர்ப்பணிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட ஜெய் ஷா கூறியிருப்பதாவது: வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி டிராபியை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

MS Dhoni: தோனியின் 43ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சல்மான் கான் – கேக் ஊட்டி விட்ட தோனி!

அதோடு, வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்படுவார். மேலும், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றிய நிலையில் அதனை ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ராகுல் டிராவிட்டிற்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

43வது பிறந்தநாள்.. தோனிக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்! எங்கு தெரியுமா?