Asianet News TamilAsianet News Tamil

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த மகாராஷ்டிரா அரசு எங்களை கௌரவிக்கவில்லை – சிராக் ஷெட்டி!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை அரசு கௌரவிக்கும் போது அவர்களும் தனது முயற்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார்.

Badminton Player Chirag Shetty said that Maharashtra government honours World Cup winners, they should've also recognised my efforts rsk
Author
First Published Jul 7, 2024, 1:48 PM IST | Last Updated Jul 7, 2024, 1:48 PM IST

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.

MS Dhoni: தோனியின் 43ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சல்மான் கான் – கேக் ஊட்டி விட்ட தோனி!

கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்திற்கு வரவேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு சென்ற ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பாக ரூ.11 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி மாற்றாந்தாயைப் போன்று மாநில அரசு நடந்து கொள்வதாக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.

43வது பிறந்தநாள்.. தோனிக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்! எங்கு தெரியுமா?

கடந்த 2022 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க தாமஸ் டிராபியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது. இதில் இந்திய அணியில் பேட்மிண்டன் வீரர்களில் ஒருவராக சிராக் ஷெட்டியும் இடம் பெற்று விளையாடியிருந்தார். இந்த் தொடரில் ஷெட்டியின் சாதனையை புறக்கணித்ததற்காக மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாமஸ் டிராபி என்பது உலகக் கோப்பை டிராபியை வெல்வதற்கு சமமானது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தாமஸ் டிராபியில் இந்திய அணி முதல் முறையாக டைட்டில் வென்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்திய இந்திய பேட்மிண்டன் அணியில் நானும் ஒருவராக இருந்தேன். நான் மட்டுமே மகாராஷ்டிரா வீரர். டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை மாநில அரசு கௌரவிக்கும் போது எனது முயற்சியையும் அரசு அங்கீகரித்திருக்க வேண்டும்.

MS Dhoni and Sakshi Net worth: சாக்‌ஷி தோனியின் நிகர சொத்து மதிப்பு, கார், லைஃப்ஸ்டைல் பற்றி தெரியுமா?

கிரிக்கெட் மட்டுமின்றி எல்லா விளையாட்டுகளையும் அரசு சமமாக நடத்த வேண்டும். மேலும், நான் கிரிக்கெட்டிற்கு எதிரானவன் அல்ல. உண்மையில் பேட்மிண்டன் வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை டிவியில் பார்த்து உற்சாகமாக கொண்டாடினோம். அதோடு, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான வெற்றியால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால், நாங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வெற்றியை பதிவு செய்தோம். மாநில அரசு கௌரவிக்கவும் இல்லை. பாராட்டி பரிசும் வழங்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு முன்பு இந்திய அணி பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிக்கு கூட சென்றதில்லை. ஆனால், நாங்கள் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios