- Home
- Gallery
- MS Dhoni and Sakshi Net worth: சாக்ஷி தோனியின் நிகர சொத்து மதிப்பு, கார், லைஃப்ஸ்டைல் பற்றி தெரியுமா?
MS Dhoni and Sakshi Net worth: சாக்ஷி தோனியின் நிகர சொத்து மதிப்பு, கார், லைஃப்ஸ்டைல் பற்றி தெரியுமா?
இந்திய அணிக்கு முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1000 கோடியையும் தாண்டிய நிலையில், அவரது மனைவி சாக்ஷி தோனியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.

MS Dhoni and Sakshi Dhoni Net Worth
இந்திய அணிக்கு முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.
MS Dhoni Net Worth
கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 முறை டிராபியை வென்று கொடுத்துள்ளது.
Sakshi Dhoni
சமீபத்தில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான சிஎஸ்கே அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடைசி அணியாக வெளியேறியது.
MS Dhoni and Sakshi Dhoni Life
ஐபிஎல் ஓய்வு குறித்து தோனியிடம் கேட்ட போது அடுத்த சீசனிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவில்லை. வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dhoni and Sakshi Dhoni Net Worth
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1000 கோடியையும் தாண்டியுள்ளது. ஆனால், பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார். தோனியின் பிஸினஸ் எல்லாவற்றையும் சாக்ஷி தோனி தான் மேற்கொள்கிறார்.
தோனியின் கார் கலெக்ஷன் என்னென்ன என்று பார்த்தால், ஹம்மர் ஹெச் 2, ஆடி க்யூ 7, மிட்சுபிஷி பஜேரோ எஸ் எஃப் எக்ஸ், லேண்ட் ரோவர் பிரிலேன்சர், மஹீந்திரா ஸ்கார்பியோ, ஃபெர்ராரி 599 ஜிடிஓ, ஜீப் கிராண்ட் செரோகி, டிராக்வாக், நிசான் ஜோங்கா, மெர்சிடெஸ் பென்ஸ் ஜிஎல்இ, ரோல்ஸ் ராய்ஸ் என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார்.
MS Dhoni Net Worth
இந்த நிலையில் தான் தோனியின் மனைவியாக சாக்ஷி தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.50 கோடி ஆகும். ராஞ்சியிலுள்ள பண்ணை வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.10 கோடி ஆகும். டெஹ்ராடூரின் ரூ.17.8 கோடிக்கு ஒரு வீடு உள்ளது. தற்போது 35 வயதாகும் சாக்ஷி தோனி ஹோட்டல் மேனேஜ்மெண்டில் பட்டம் வென்றுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஹோட்டலில் பணியாற்றியுள்ளார். அப்போது தான் தோனியை முதன் முதலாக பார்த்துள்ளார்.
Sakshi Dhoni Net Worth
தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சாக்ஷி தோனி தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.