உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.

இந்தியாவில் 4ஆவது முறையாக உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த தொடர் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா என்று 10 மைதானங்களில் நடக்க இருக்கிறது.

எப்போ வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம்; குழந்தை பிறப்பில் கலந்து கொள்ள சிட்டா பறந்து வந்த பும்ரா!

இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை லீக் போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடிய பிறகு உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.

Virat Kohli Sand Art: விராட் கோலிக்காக உருவாக்கப்பட்ட மணல் சிற்பம் ஓவியம்; வைரலாகும் வீடியோ!

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை 30 நாட்களுக்கு முன்பாகவே அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும். இதன் காரணமாக நாளைக்குள்ளாக அணியில் இடம் பெறும் வீரர்களை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்ய அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

India vs Nepal, Jasprit Bumrah: தனிப்பட்ட காரணத்திற்காக மும்பை பறந்த ஜஸ்ப்ரித் பும்ரா!

இதையடுத்து உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளனர். இதில், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இஷான் கிஷான், கேஎல் ராகுல், சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. எனினும் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

BAN vs AFG: இடி மாதிரி விழுந்த அடி, வாரி கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்; வங்கதேசம் 334 ரன்கள் குவிப்பு!