பலுசிஸ்தானில் குவாதரில் உள்ள தீவிர கிரிக்கெட் ரசிகர் விராட் கோலியின் அழகிய மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான உதாரணம் இந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர். பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து 16ஆவது ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. ஆசிய கோப்பைக்காக இந்திய அணி வீரர்கள் இலங்கைக்கு வந்தனர். இதன் காரணமாக விராட் கோலியின் ரசிகர்கள், அவருக்கு பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து கோலியின் வருகையை கொண்டாடினர்.
India vs Nepal, Jasprit Bumrah: தனிப்பட்ட காரணத்திற்காக மும்பை பறந்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் கோலியின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர், பலுசிஸ்தானின் குவாதரில் விராட் கோலிக்கு அழகிய மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
எனினும், மழையால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
