India vs Nepal, Jasprit Bumrah: தனிப்பட்ட காரணத்திற்காக மும்பை பறந்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை பறந்து சென்றுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக அணிக்கு திரும்பி வந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இதையடுத்து ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. முன் வரிசை வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரது காம்போவில் இந்திய அணி நிதானமாக ரன்கள் குவித்தது. கடைசியாக வந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 3 பவுண்டரி உள்பட 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், பாகிஸ்தான் விளையாட இருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தான் நாளை இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதில், ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற மாட்டார் என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக அவர் மும்பைக்கு பறந்து சென்றுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளிகள் மட்டுமே பெற்ற நிலையில், நாளை நடக்க உள்ள போட்டியில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
ஏற்கனவே நாளை நடக்க உள்ள போட்டியும் மழையால பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது பும்ராவும் அணியிலிருந்து விலகியது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றதால், ஷமி இடம் பெறவில்லை.
இந்த நிலையில், பும்ராவிற்குப் பதிலாக ஷமி இடம் பெறுவார் என்று தெரிகிறது. மேலும், பும்ரா மீண்டும் சூப்பர் 4 சுற்று மூலமாக அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
Men’s Asian Hockey 5s World Cup qualifier: ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி – இந்தியா சாம்பியன்!