ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஹீத் ஸ்ட்ரீக் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

Zimbabwe cricket legend Heath Streak has passed away rsk

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியவர் ஹீத் ஸ்ட்ரீக் (49). பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்து விளங்கியவர். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1990 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 216 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். மேலும், 189 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2942 ரன்கள் கைப்பற்றி, 239 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஹீத் ஸ்ட்ரீக் பெற்றிருக்கிறார்.

Men’s Asian Hockey 5s World Cup qualifier: ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி – இந்தியா சாம்பியன்!

ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த மே மாதம் முதல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கடந்த வாரமே அவர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, தான் நலமாக இருப்பதாக கூறியிருந்தார்.

Asia Cup 2023: 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம்; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

இந்த நிலையில், தான் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக அவரது மனைவி நாடின் ஸ்ட்ரீக் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது வாழ்க்கையின் அன்பு, அழகான குழந்தைகளின் தந்தை, குடும்பம், நண்பர்களால் சூழ கடைசி நாட்களை கழிக்க விரும்பி தனது வீட்டிலிருந்து தேவதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறியுள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் மறைவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

India vs Pakistan: மழையால் கைவிடப்பட்ட போட்டி; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி; ஏமாந்து போன ரசிகர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios