Asia Cup 2023: 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம்; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியானது பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தார்.
வங்கதேச அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தன்சித் ஹசன், முஸ்தாபிஜூர் ரஹ்மான், மஹதி ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஹசன் மஹ்மூத், அஃபிஃப் ஹூசைன், ஷமீம் ஹூசைன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசம்:
முகமது நைம், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), ஷமீம் ஹூசைன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), அஃபிப் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான், ஃபசல்ஹக் பாரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்