எப்போ வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம்; குழந்தை பிறப்பில் கலந்து கொள்ள சிட்டா பறந்து வந்த பும்ரா!
தனது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மும்பைக்கு பறந்து வந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கும், டெலிவிஷன் பிரபலமான சஞ்சனா கணேஷிற்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது.
Virat Kohli Sand Art: விராட் கோலிக்காக உருவாக்கப்பட்ட மணல் சிற்பம் ஓவியம்; வைரலாகும் வீடியோ!
இதுவரையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்று விளையாடினார். இதில், பும்ரா கடைசியாக வந்து 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், பாகிஸ்தான் அணி மழையால் பந்து வீசவில்லை. இதன் காரணமாக போட்டியானது ரத்து செய்யப்பட்டது.
India vs Nepal, Jasprit Bumrah: தனிப்பட்ட காரணத்திற்காக மும்பை பறந்த ஜஸ்ப்ரித் பும்ரா!
மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.இதன் காரணமாக பாகிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. வரும், 6 ஆம் தேதி குரூப் பி பிரிவில் 2ஆவது இடம் பிடிக்கும் அணியுடன் மோத உள்ளது. இதற்கிடையில் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில், தான் ஜஸ்ப்ரித் பும்ரா தனிப்பட்ட காரணத்திற்காக மும்பை பறந்து சென்றுள்ளார் என்று கூறப்பட்டது. அது என்ன காரணம் என்று கூறப்பட்டவில்லை. தற்போது அதற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, தனது முதல் குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா மும்பைக்கு சென்றுள்ளார். ஆம், சஞ்சனா கணேஷிற்கு எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சூப்பர் 4 சுற்றுக்காக மீண்டும் அணியில் இணைவார் என்று சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடக்க உள்ள போட்டியும் மழையால பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது பும்ராவும் அணியிலிருந்து விலகியது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றதால், ஷமி இடம் பெறவில்லை. இந்த நிலையில், பும்ராவிற்குப் பதிலாக ஷமி இடம் பெறுவார் என்று தெரிகிறது.