Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: 2வது இன்னிங்ஸிலும் வங்கதேசம் பேட்டிங்கில் சொதப்பல்..! இந்திய அணியின் வெற்றி உறுதி

2வது டெஸ்ட்டில் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. 
 

bangladesh set 145 runs target to india in second test held at dhaka
Author
First Published Dec 24, 2022, 3:10 PM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் அடித்தது. அந்த அணியில் மோமினுல் ஹக் மட்டுமே சிறப்பாக ஆடி 84 ரன்கள் அடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினர்.

IPL 2023: அடுத்த கேப்டன் யார்..? சிஎஸ்கே சி.இ.ஓ தகவல்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ராகுல் (10), ஷுப்மன் கில் (20), புஜாரா(24), கோலி (24) ஆகிய நால்வரும் சொதப்ப, அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிலையில், ரிஷப் பண்ட் 93 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் அடித்தது. 

87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் மற்றும் தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாகிர் ஹசன் 51 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் டஸ்கின் அகமது மற்றும் நூருல் ஹசன் ஆகிய இருவரும் நன்றாக ஆடி தலா 31 ரன்கள் அடித்தார். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. 

2வது இன்னிங்ஸில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள்

வெறும் 144 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற வங்கதேச அணி, 145 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது. இந்த எளிய இலக்கை இந்திய அணி அடித்துவிடும் என்பதால் இந்த போட்டியிலும் வெற்றி உறுதியாகிவிட்டது. எனவே 2-0 என வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிக சதவிகிதத்துடன் 2ம் இடத்தை வலுவாக பிடிக்கும் இந்திய அணி.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios