IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. அதனால் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன் ஆகிய ஆல்ரவுண்டர்கள் தான் அதிக தொகைக்கு விலைபோனார்கள். கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலைபோனார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஜோ ரூட்டை ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் சில வீரர்கள் எதிர்பாராத விதமாக அதிகமான தொகைக்கும், சில வீரர்கள் விலைபோகாமலேயும், சில வீரர்கள் குறைவான தொகைக்கும் விலைபோன நிலையில், அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்களை பார்ப்போம்.
1. சாம் கரன் (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்) - ரூ.18.5 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன்.
2. கேமரூன் க்ரீன் - ரூ.17.5 கோடி - மும்பை இந்தியன்ஸ்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மற்ற அணிகளுடன் கடும் போட்டி போட்டு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. கைரன் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகிய ஆல்ரவுண்டர்களின் இடத்தை நிரப்பும் நோக்கில் கேமரூன் க்ரீனை மும்பை அணி எடுத்தது.
3. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
சாம் கரனை எடுக்க முயன்று முடியாததால், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும், மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே ரூ.16.25 கோடிக்கு எடுத்தது.
4. நிகோலஸ் பூரன் - ரூ.16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
நிகோலஸ் பூரனுக்கு இது அதிகமான தொகை என்றாலும், ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவை என்ற வகையிலும், அதிரடியான பேட்ஸ்மேன், சிறந்த ஃபீல்டர் என்ற முறையிலும் பூரனை லக்னோ அணி வாங்கியது..
5. ஹாரி ப்ரூக் - ரூ.13.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இங்கிலாந்து அணிக்காக அண்மைக்காலமாக அபாரமாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹாரி ப்ரூக்கை சன்ரைசர்ஸ் அணி ரூ.13.25 கோடி கொடுத்து வாங்கியது.
6. மயன்க் அகர்வால் - ரூ.8.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பஞ்சாப் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட மயன்க் அகர்வாலை, ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சனை விடுவித்ததால் கேப்டன்சி ஆப்சனாகவும் பார்த்து மயன்க் அகர்வாலை சன்ரைசர்ஸ் வாங்கியது.
7. ஷிவம் மாவி - ரூ.6 கோடி - குஜராத் டைட்டன்ஸ்
இந்தியாவை சேர்ந்த 140 கிமீ வேகத்திற்கும் மேலாக பந்துவீசவல்ல ஷிவம் மாவியை குஜராத் அணி ரூ. 6 கோடி கொடுத்து எடுத்தது குஜராத் அணி இந்த ஏலத்தில் கொடுத்த அதிகபட்ச விலை இவருக்குத்தன.
8. ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
லக்னோ அணி விடுவித்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் அணி வாங்கியது.
9. முகேஷ் குமார் - ரூ.5.5 கோடி - டெல்லி கேபிடள்ஸ்
டெல்லி கேபிடள்ஸ் அணியில் நெட் பவுலராக இருந்துவந்த முகேஷ் குமாரின் பவுலிங் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர் ரிக்கி பாண்டிங்கை கவர்ந்ததன் விளைவாகவும், முகேஷ் குமாரை ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.
10. ஹென்ரிச் கிளாசன் - ரூ.5.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நிகோலஸ் பூரனை விடுவித்த சன்ரைசர்ஸ் அணி, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் கிளாசனை எடுத்தது