IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள்
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள் யார் யாரென்று பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. அதனால் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன் ஆகிய ஆல்ரவுண்டர்கள் தான் அதிக தொகைக்கு விலைபோனார்கள். கேன் வில்லியம்சன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு விலைபோனார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஜோ ரூட்டை ரூ.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஏலத்தின் முதல் கட்டத்தில் விலைபோகாத ஷகிப் அல் ஹசன், ரைலீ ரூசோ, ஆடம் ஸாம்பா ஆகிய வீரர்கள் 2ம் கட்ட ஏலத்தில் அணிகளால் எடுக்கப்பட்டனர்.
IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்
ஏலத்தில் எந்த அணியும் எடுக்க விரும்பாததால் கடைசி வரை விலைபோகாத பெரிய வீரர்களை பார்ப்போம்.
1. டேவிட் மலான் - அடிப்படை விலை ரூ.1.5 கோடி
இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அபாரமாக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள டேவிட் மலானையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
2. ராசி வாண்டர்டசன் - அடிப்படை விலை ரூ.2 கோடி
தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் வாண்டர்டசனை அடிப்படை விலைக்கு எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. வாண்டர்டசன் அதிரடியாகவும், நிலைத்து நின்றும் ஆடக்கூடிய வீரராக இருந்தும் கூட அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
3. டாம் பாண்ட்டன் - அடிப்படை விலை ரூ.2 கோடி
இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டனை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை என்பது பெரிய அதிர்ச்சி. அதிரடியாக பேட்ஸ்மேனாக இருந்தும் கூட, 2020க்கு பிறகு அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. 2020ல் கேகேஆர் அணி எடுத்தது.
4. ஜேசன் ராய் - அடிப்படை விலை ரூ.1.5 கோடி
இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராயை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க விரும்பவில்லை. இங்கிலாந்து அணியின் முதன்மை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விலை போகவில்லை.
IPL 2023 Auction: ஜோ ரூட்டின் கனவு நனவானது.. ஐபிஎல்லில் முதல் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ரூட்
5. நேதன் குல்ட்டர்நைல் - அடிப்படை விலை ரூ.1.5 கோடி
ஆஸ்திரேலிய அணியின் முன்னனி ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலையும் எந்த அணியும் எடுக்கவில்லை.