Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட்டில் 3 ஆண்டுக்கு பின் களமிறங்கி கலக்கிய சர்ஃபராஸ்; சதத்தை தவறவிட்டார்! இரட்டை சதத்தை நோக்கி பாபர் அசாம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங்  ஆடிவரும் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. 161 ரன்களுடன் களத்தில் இருக்கும் பாபர் அசாம் இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் ஆடிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
 

babar azam playing towards double century sarfaraz ahmed missed century in first test against new zealand
Author
First Published Dec 26, 2022, 7:01 PM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக வச்சுகிட்டு இதுதான் நீங்க ஃபீல்டிங் பண்ற லெட்சணமா..? கோலியை விளாசிய கவாஸ்கர்

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 7 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஷான் மசூத் 3 ரன்களுக்கும், சௌஷ் ஷகீல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக பேட்டிங்  ஆடி சதமடித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் அகமது சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். பாபர்  அசாம் - சர்ஃபராஸ் அகமது ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி 5வது விக்கெட்டுக்கு 194 ரன்களை குவித்தனர்.  86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் சர்ஃபராஸ் அகமது. 

AUS vs SA: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26 தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுவது ஏன் தெரியுமா..?

150 ரன்களை கடந்து இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார் பாபர் அசாம். முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

Follow Us:
Download App:
  • android
  • ios