அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய ராஜ்குமார்: திருச்சி 120க்கு ஆல் அவுட்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய பா11சி திருச்சி அணி 120 ரன்கள் குவித்துள்ளது.

Ba11sy Trichy score 120 runs against Dindigul Dragons in TNPL 2023, Coimbatore

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

34 ரன்கள் எடுத்த ஹாங்காங்: இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை!

இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று பிற்பகலில் நடந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது நடந்து வரும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

4 சிக்ஸர் விளாசி நெல்லைக்கு வெற்றி தேடிக் கொடுத்த நிதிஷ் ராஜகோபால்!

அதன்படி முதலில் ஆடிய பா11சி திருச்சி அணி 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 48 ரன்களும், ராஜ்குமார் 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவிச்சந்திரன் வீசிய 4ஆவது ஓவரில் மட்டும் திருச்சி அணி வீரர் ராஜ்குமார் 4, 6, 6 என்று வரிசையாக பொளந்து கட்டினார்.

திண்டுக்கல்லா? திருச்சியா? ரவிச்சந்திரன் அஸ்வின் டீம் அண்ட் நடராஜன் டீம் பலப்பரீட்சை!

பந்து வீச்சு தரப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், சரவணக் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், சுபோத் பதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), எஸ் அருண், பூபதி குமார், விமல் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பி சரவணக் குமார், எம் மதிவாணன், வருண் சக்கரவர்த்தி, சி சரத் குமார், சுபோத் பதி.

ஆதரவு கொடுத்த கேப்டன் ஹரி நிஷாந்த், ஆளாளுக்கு டக் அவுட்டில் வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ் வீரர்கள்!

பா11சி திருச்சி:

கங்கா ஸ்ரீதர் ராஜூ (கேப்டன்), ஜாஃபர் ஜமால், தரில் பெர்ராரிரோ, அக்‌ஷய் ஸ்ரீநிவாசன், மணி பாரதி (விக்கெட் கீப்பர்), ஆண்டனி தாஸ், எம் ஷாஜஹான், ஆர் ராஜ்குமார், ஆர் சிலம்பரசன், ஆர் அலெக்ஸாண்டர், டி நடராஜன்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios