34 ரன்கள் எடுத்த ஹாங்காங்: இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை!
ACC மகளிர் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் மகளிர் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, நேபாள் ஏ மற்றும் ஹாங்காங் அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம் ஏ, இலங்கை ஏ, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மலேசியா ஆகிய பெண்கள் அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
4 சிக்ஸர் விளாசி நெல்லைக்கு வெற்றி தேடிக் கொடுத்த நிதிஷ் ராஜகோபால்!
கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 21 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காய் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஹாங்காங் அணியில் மரிகோ ஹில் மட்டும் அதிகபட்சமாக 14 ரன்கள் சேர்த்தார்.
திண்டுக்கல்லா? திருச்சியா? ரவிச்சந்திரன் அஸ்வின் டீம் அண்ட் நடராஜன் டீம் பலப்பரீட்சை!
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹாங்காங் அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பந்து வீச்சு தரப்பில் இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பட்டீல் 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 2 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
மன்னட் காஷ்யப், பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டைட்டஸ் சது ஒரு விக்கெட் கைப்பற்றினார். பின்னர் 35 ரன்களை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு ஷ்வேதா ஷெஹ்ராவத் 2 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த உமா சேத்ரி மற்றும் கோங்கடி த்ரிஷா இருவரும் இணைந்து 35 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தனது பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா!