ஆதரவு கொடுத்த கேப்டன் ஹரி நிஷாந்த், ஆளாளுக்கு டக் அவுட்டில் வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ் வீரர்கள்!
டிஎன்பிஎல் தொடரின் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் தனது பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா!
இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று 2 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் சீகேம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், அடுத்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணியும் மோதுகின்றன.
களத்தில் இறங்கும் வாஷிங்டன் சுந்தர்: சீகேம் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங்!
இதில், டாஸ் வென்ற சீகேம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி, சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
பந்து வீச்சு தரப்பில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் மோகன் பிரசாந்த் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சோனு யாதவ் மற்றும் எம் பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
சீகம் மதுரை பாந்தர்ஸ்:
எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன் (கேப்டன்), பாலு சூர்யா, குர்ஜப்னீத் சிங், தேவ் ராகுல்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), எஸ்ஜே அருண் குமார், நிஷித் ராஜகோபால், சோனு யாதவ், ரிதிக் ஈஸ்வரன், அஜிதேஷ் குருசாமி, கார்த்திக் மணிகண்டன், எஸ் மோகன் பிரசாந்த், சந்தீப் வாரியர், எம் பொய்யாமொழி, லக்ஷய் ஜெயின்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- Hari Nishanth
- Nellai Royal Kings
- Siechem Madurai Panthers
- Siechem Madurai Panthers vs Nellai Royal Kings
- TNPL 2023
- TNPL 2023 Crickets Stars
- TNPL 2023 Images
- TNPL 2023 Live Scores
- TNPL 2023 Live Updates
- TNPL 2023 Match Highlights
- TNPL 2023 Photos
- TNPL 2023 Players List
- TNPL 2023 Points Tables
- TNPL 2023 Prize Money
- TNPL 2023 Records
- TNPL 2023 Score Updates
- TNPL 2023 Scores
- Tamil Nadu Premier League 2023
- Watch TNPL 2023 Live