களத்தில் இறங்கும் வாஷிங்டன் சுந்தர்: சீகேம் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங்!

டிஎன்பிஎல் தொடரின் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சீகேம் மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Siechem Madurai Panthers won the toss and have opted to bat first against Nellai Royal Kings in TNPL 2023 at Coimbatore

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு, லெஃப் ஹேண்ட், லெஃப் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்டில் பந்து வீசிய மோகித் ஹரிஹரன்

இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று 2 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் சீகேம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், அடுத்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சீகேம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில், வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் – 15 பேர் கொண்ட இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங் கணிப்பு!

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஜெகதீசன் கௌசிக், வாஷிங்டன் சுந்தர், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், முருகன் அஸ்வின், சுதன் காண்டீபன் (கேப்டன்), பாலு சூர்யா, குர்ஜப்னீத் சிங், தேவ் ராகுல்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), எஸ்ஜே அருண் குமார், நிஷித் ராஜகோபால், சோனு யாதவ், ரிதிக் ஈஸ்வரன், அஜிதேஷ் குருசாமி, கார்த்திக் மணிகண்டன், எஸ் மோகன் பிரசாந்த், சந்தீப் வாரியர், எம் பொய்யாமொழி, லக்‌ஷய் ஜெயின்.

3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios