வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் – 15 பேர் கொண்ட இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங் கணிப்பு!
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததோடு, சாம்பியனாகும் வாய்ப்பையும் இழந்தது. இதன் மூலமாக 2ஆவது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்று தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியின் தொடர்கள் அறிவிக்கப்பட்டது. இதில், 3 உள்ளூர் தொடர்களிலும், 3 வெளியூர் தொடர்களிலும் இந்திய அணி விளையாடுகிறது. ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.
3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!
இந்தியாவிற்கு வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
2ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையில் ஒரு நாள் போட்டியும், 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் டி20 போட்டியும் நடக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், ஜித்தேஷ் சர்மா, ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் மத்வால்