மொத்த பரிசு தொகையையும் நீங்களே வச்சுக்கங்க.. இலங்கை குழந்தைகளுக்கு அப்படியே தூக்கி கொடுத்த ஆஸ்திரேலிய அணி

இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியும், வீரர்களும் வென்ற பரிசுத்தொகையை, இலங்கை பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
 

australian cricketers donate their prize money to support economic crisis impacted kids and families of sri lanka

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்ற வென்ற நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்தது.

இதையும் படிங்க - இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

ஆஸ்திரேலிய தொடரை ஒருவழியாக நடத்திமுடித்த இலங்கை, ஆசிய கோப்பை தொடரை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை தொடரை தங்களால் நடத்தமுடியாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டதால், ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில், உணவு, பெட்ரோல், டீசல், ஆடை ஆகிய அடிப்படையாக அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. அதனால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை, நடுத்தர குடும்பங்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை குழந்தைகளுக்கும், ஏழை குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உதவ முன்வந்துள்ளது. 

இதையும் படிங்க - பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா புழுகுமூட்டை..? நடிகை ஊர்வசி ரவுத்தேலாவை வெளுத்துவாங்கிய ரிஷப் பண்ட்

இலங்கை கிரிக்கெட் தொடரில் ஆடியதில் கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் அப்படியே இலங்கையில் இருக்கும் UNICEF-க்கு வழங்குவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் UNICEF தூதருமான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பொதுவாகவே உதவும் குணம் கொண்டவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அமெரிக்க டாலில் 50,000, பாட் கம்மின்ஸ் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios