பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா புழுகுமூட்டை..? நடிகை ஊர்வசி ரவுத்தேலாவை வெளுத்துவாங்கிய ரிஷப் பண்ட்
தனக்காக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காத்திருந்ததாக, நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு நேர்காணலில் கூற, அதை அறிந்து கடுப்பான ரிஷப் பண்ட், நடிகை ஊர்வசிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்குமான காதல் அல்லது கிசுகிசு என்பது காலங்காலமாக தொடர்ந்துவருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் நடிகை நக்மாவுக்கும் இடையே காதல் என சில காலம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதைத்தொடர்ந்து தோனி - ராய் லக்ஷ்மி, விராட் கோலி - தான்னா என தொடர்ச்சியாக, அந்தந்த காலக்கட்டங்களில் இந்திய அணியின் பெரிய கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்த வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் காதம் என்று தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து பொதுவெளியில் காணப்பட்டதுதான், இந்த கிசுகிசுக்களுக்கு காரணமானதே தவிர, கிசுகிசுக்கள் காரணமில்லாமல் எழவில்லை.
விராட்கோலிக்கு தமன்னாவுடன் காதல் என தகவல் ஆரம்பத்தில் பரவினாலும், அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து, 2017 டிசம்பரில் திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதையும் படிங்க - இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்
இந்த வரிசையில் அடுத்ததாக, நடிகையுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டது ரிஷப் பண்ட் பெயர் தான். இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலமாக நம்பப்படும் ரிஷப் பண்ட், மிகப்பெரிய வீரராக வளர்ந்துள்ளார். 2018ம் ஆண்டு ரிஷப் பண்ட்டுக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் அது அப்படியே அடங்கிப்போனது.
இந்த ஊர்வசி ரவுத்தேலா தான், அண்மையில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ஊர்வசி ரவுத்தேலா, நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த Mr. RP எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன.
நான் தூங்கி எழுந்தபோது 16-17 மிஸ்டு கால்கள் இருந்தன. எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. பொதுவாக பெண்களுக்கு காக்கவைப்பது பிடிக்கும். அதன்பின்னர் அவரை தொடர்புகொண்டு, மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று கூறிவிட்டேன் என்றார் ரவுத்தேலா.
இதையும் படிங்க - இந்திய அணியில் இடம் இல்ல.. வர்ணனையில் வேணா எனக்கு அருகில் ஒரு இடம் இருக்கு! தினேஷ் கார்த்திக்கை ஜடேஜா நக்கல்
இதில் அவர் Mr. RP என்று குறிப்பிட்டிருப்பது ரிஷப் பண்ட்டைத்தான் என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டியை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராமில், வெற்று விளம்பரத்திற்காகவும், தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் சிலர் நேர்காணலில் பொய்களாக பேசுகின்றனர். வெற்று பிரபலத்திற்காக பொய்களை அள்ளி தெளிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டார்.
ஆனால் தனது அந்த பதிவை ரிஷப் பண்ட் நீக்கிவிட்டபோதிலும், அதற்குள்ளாக அதை ரசிகர்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்ததால் அது வைரலாக பரவிவருகிறது.