MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

இந்த பையன் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர்.! 3 ஃபார்மட்டிலும் இவன் தான் நம்பர் 1.. ஜெயவர்தனே புகழாரம்

பாபர் அசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர் என்றும், 3 விதமான போட்டிகளிலும் அவர் நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என்றும் இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே புகழாரம் சூட்டியுள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 11 2022, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் 5வதாக சேர்ந்ததுடன், மிக விரைவிலேயே இந்த ஜாம்பவான்களை எல்லாம் ஓரங்கட்டி டாப்பிற்கு சென்றுவிட்டார் பாகிஸ்தானின் பாபர் அசாம்.
 

26

மிகவும் தேர்ந்த, தெளிவான, பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாத, சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள பாபர்  அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 ஃபார்மட்டிலும் அபாரமாக விளையாடி, பழைய பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..! கோலி, ராகுல் கம்பேக்.. பும்ரா, ஹர்ஷல் படேல் அவுட்

36

42 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3122 ரன்களை குவித்துள்ள பாபர் அசாம், 89 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 4442 மற்றும் 2686 ரன்களை குவித்துள்ளார். 
 

46

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 பேட்டிங் தரவரிசைகளில் முதலிடத்தில் உள்ள பாபர் அசாம், டெஸ்ட் தரவரிசையில் மட்டும் 3ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவருக்கும் அடுத்த இடத்தில் உள்ளார். விரைவில் டெஸ்ட்டிலும் முதலிடத்தை பிடித்துவிடுவார்.

இதையும் படிங்க - இந்திய அணியில் இடம் இல்ல.. வர்ணனையில் வேணா எனக்கு அருகில் ஒரு இடம் இருக்கு! தினேஷ் கார்த்திக்கை ஜடேஜா நக்கல்

56

கேப்டன்சி அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்துவிடாமல் இரண்டையுமே சிறப்பாக செய்துவரும் பாபர் அசாம், இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவை வெகுவாக கவர்ந்துவிட்டார். 
 

66

இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள மஹேலா ஜெயவர்தனே, பாபர் அசாம் 3 விதமான ஃபார்மட்டிலும் அருமையாக ஆடிவருகிறார். அவர் 3 ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார். அவர் கிஃப்ட்டாக கிடைத்த பிளேயர். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடுகிறார். டெக்னிக், டைமிங், நிதானம் என அனைத்தையுமே ஒருசேர பெற்று, பேட்டிங்கில் அசத்துகிறார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டுக்கும் என்ன தேவை என்பதை, எப்படி ஆடவேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப திறம்பட தன்னை தகவமைத்து தெளிவாக செயல்படுகிறார்.  கேப்டன்சியிலும் ஜொலித்து பேட்டிங்கிலும் ஜொலிப்பது எளிய விஷயம் அல்ல. அதை பாபர் செய்கிறார் என ஜெயவர்தனே புகழாரம் சூட்டினார்.
 

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்
Recommended image2
6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!
Recommended image3
IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved