Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS 2nd ODI: கெத்தா, கம்பீரமாக வந்த ரோகித் சர்மா, ஜெயிக்க அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 

Australia won the toss and choose to bowl first against India 2nd ODI in Visakhapatnam
Author
First Published Mar 19, 2023, 1:28 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து தொடங்கிய 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மழை நின்று வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில், டாஸ் தற்போது போடப்பட்டது.

இந்தியா:

ரோகித் சர்மா, சுப்மன் கில்,  விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல்,  ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ச்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார், ஆடம் ஜம்பா.

காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல்லிற்குப் பதிலாக நாதன் இல்லிஸ் மற்றும், இங்க்லிஸிற்கு பதிலாக அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே போன்று முதல் போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷான் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Asian Race Walking Championships - 20 கி.மீ பிரிவில் அக்‌ஷ்தீப் சிங் தங்கம், பிரியங்கா வெண்கலம் வென்று சாதனை!

ஏற்கனவே மழை பெய்து மைதானம் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த நிலையில், மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆதலால், முதலில் பேட்டிங் ஆடும் அணிக்கு சற்று கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக முதல் ஒரு நாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா வெற்றி பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தப் போட்டியில் அவர் தனது கேப்டன்ஸியை நிரூபிக்க வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தோல்வியை தழுவினால், ஹர்திக் பாண்டியா முழு நேர ஒரு நாள் கேப்டனாக செயல்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!

Follow Us:
Download App:
  • android
  • ios