ஜெட் வேகத்தில் சென்ற ஆஸி, ஸ்கோர் – டர்னிங் பாய்ண்டான குல்தீப் யாதவ், பும்ரா – இந்தியாவிற்கு 353 ரன்கள் இலக்கு!
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 2 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
IND vs AUS, 3rd ODI: இஷான் கிஷானுக்கு வைரஸ் காய்ச்சல்: ரோகித் – விராட் கோலி தான் ஓபனிங்கா?
இதில், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். 6 ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலியா 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய வார்னர் இந்தப் போட்டியிலும் அரைசதம் அடித்தார். இறுதியாக அவர், 34 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து மீண்டும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 215 ரன்கள் குவித்தது.
IND vs AUS 3rd ODI: வாட்டி வதைத்த வெயில், மைதானத்திலேயே சேரில் ரெஸ்ட் எடுத்த ஸ்டீவ் ஸ்மித்!
இதில், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அதன் பிறகு ஸ்மித்துடன், மார்னஷ் லபுஷேன் இணைந்தார். இதையடுத்து ஸ்கோர் மெல்ல மெல்ல குறைந்தது. ஒரு கட்டத்தில் ஸ்மித் அரைசதம் அடித்த நிலையில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 74 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
பாய்மர படகுப் போட்டியில் வெண்கலம்; தமிழக வீரர் விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
இதையடுத்து, அலெக்ஸ் கேரி களமிறங்கினார். அவர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த உலகக் கோப்பையில் இடம் பெற்ற வீரர் கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் 9 ரன்களில் வெளியேற, இறுதியாக லபுஷேன் 58 பந்துகளில் 9 பவுண்டரி அடித்த நிலையில், 72 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கேப்டன் பேட் கம்மின்ஸ் 19 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 81 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் 6 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருவரும் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.