Asianet News TamilAsianet News Tamil

பாய்மர படகுப் போட்டியில் வெண்கலம்; தமிழக வீரர் விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பாய்மர படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Minister Udhayanidhi Stalin praised TN player Vishnu Saravanan who won Bronze medal in Sailing in Asian Games 2023 at Hangzhou rsk
Author
First Published Sep 27, 2023, 3:29 PM IST

ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் நடந்த போட்டிகளின் படி சீனா 70 தங்கம், 39 வெள்ளி மற்றும் 16 வெண்கல பதக்கத்துடன் 125 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கத்துடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையின் நேற்று நடந்த பெண்களுக்கான Dinghy ILCA4 பாய்மர படகுப் போடியில் 17 வயதான நேஹா தாக்கூர் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Asian Games Mens T20: 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 சிக்ஸர்கள், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த தீபேந்திர சிங்!

இதே போன்று ஆண்களுக்கான பாய்மர படகு போட்டியில் விஷ்ணு வரதன் 34 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். ஒரு புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் கொரியா வீரர் ஹா ஜீமின் வெள்ளி வென்றுள்ளார். மற்றொரு போட்டியில் ஆண்களுக்காக நடந்த windsurfer RS:X போட்டியில் ஈபத் அலி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

IND vs AUS 3rd ODI Live Match: இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க அதிரடி மாற்றத்தோடு களமிறங்கிய ஆஸ்திரேலியா!

இந்த நிலையில், பாய்மர படகுப் போட்டியில் வெண்கலம் வென்ற விஷ்ணு சரவணனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் Asian Games 2023- ல் பாய்மரப் படகுப் போட்டியில்  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பி விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

Asian Games, Sift Kaur Samra: பெண்களுக்கான 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று கொடுத்த சாம்ரா!

தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணனை பாராட்டுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் அவர் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios