Asian Games, Sift Kaur Samra: பெண்களுக்கான 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று கொடுத்த சாம்ரா!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷிஃப்ட் சம்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றிருந்தது.
இந்த நிலையில் தான் 5ஆவது நாளான இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
CWC 2023: உலகக் கோப்பைக்கான அணிகளை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா #WelcometoIndia!
இதே போன்று நடந்த 50 மீட்டர் பிஸ்டல் 3 பொசிஷன் பிரிவில் சாம்ரா, ஆஷ் சௌஷி மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், 50 மீட்டர் பிஸ்டல் தனிப்பிரிவில் இந்தியாவின் ஷிஃப்ட் சாம்ரா 496.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Asian Games 2023, Shooting: பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!
அதேபோல் ஆஷி சௌக்ஷியும் தனிப்பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய போட்டிகளில் ஆஷி சௌக்ஷி வெல்லும் 3வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் வெள்ளி பதக்கமும், 50 மீட்டர் ரைபிள் குழு பிரிவில் வெள்ளிப் பதக்கும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.