இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்தியா வந்துள்ள நிலையில், #WelcometoIndia ஹேஷ்டேக் மூலமாக அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ, ஹைதராபாத், தர்மசலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

Asian Games 2023, Shooting: பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!

இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இலங்கை அணி நேற்று தங்களது அணியை அறிவித்தது.

ODI World Cup 2023: தமீம் இக்பாலுக்கு ஆப்பு வைத்த ஷாகிப் அல் ஹசன்: உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு;

இதையடுத்து இறுதியாக வங்கதேச அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்தது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா வந்த அவர்களுக்கு பட்டு துண்டு அணிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விசா கிடைத்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

ODI World Cup Warm Up Match Schedule 2023: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி அட்டவணை வெளியீடு!

மேலும் இலங்கை அணியும் நேற்று இரவு இந்தியாவிற்கு புறப்பட்டது எனப்து குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைக்கு முன்னதாக 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் ஒவ்வொரு அணியும் இடம் பெற்று விளையாடுகின்றன. இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 29 வங்கதேசம் – இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 29 தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 29 நியூசிலாந்து – பாகிஸ்தான் – ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 30 இந்தியா – இங்கிலாந்து – கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

செப்டம்பர் 30 ஆஸ்திரேலியா – நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 02 நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 02 இங்கிலாந்து – வங்கதேசம் கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 ஆப்கானிஸ்தான் – இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 இந்தியா – நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி

அக்டோபர் 03 பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி

இந்த வார்ம் அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைட் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

ODI World Cup Warm Up Match Schedule 2023: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி அட்டவணை வெளியீடு!

Scroll to load tweet…

Scroll to load tweet…