IND vs AUS 3rd ODI Live Match: இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க அதிரடி மாற்றத்தோடு களமிறங்கிய ஆஸ்திரேலியா!
இந்தியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் முறையே இந்தியா 5 விக்கெட்டுகள் மற்றும் 99 ரன்கள் (டக் ஒர்த் லீவிஸ் முறை) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும், ஆஸ்திரேலிய அணியில் 5 விதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஜோஸ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தன்வீர் சங்கா இந்தப் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
அதோடு, சீன் அபாட், ஆடம் ஜம்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பேட் கம்மின்ஸூம் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று இந்திய அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் அணியில் இருக்கிறார்.
இந்த ராஜ்கோட் மைதானமானது, ஆடுகளம் சமநிலையான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், சேஸிங் செய்வது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.
CWC 2023: உலகக் கோப்பைக்கான அணிகளை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா #WelcometoIndia!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன், தன்வீர் சங்கா, ஜோஸ் ஹசல்வுட்.
Asian Games 2023, Shooting: பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!
Expectation:
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் முதல் பேட்டிங் செய்யும் அணி அதிகபட்சமாக 330 ரன்கள் குவிக்க வாய்ப்பு.
இதே போன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு உண்டு.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் எடுக்க வாய்ப்பு.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
கேமரூன் க்ரீன் அதிக சிக்ஸர்கள் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.