IND vs AUS, 3rd ODI: இஷான் கிஷானுக்கு வைரஸ் காய்ச்சல்: ரோகித் – விராட் கோலி தான் ஓபனிங்கா?
இஷான் கிஷானுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெறவில்லை.
உலகக் கோப்பைக்கு முன்னதான இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா ஒரு முன்னோட்டமாக இருக்கும் வகையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது.
IND vs AUS 3rd ODI: வாட்டி வதைத்த வெயில், மைதானத்திலேயே சேரில் ரெஸ்ட் எடுத்த ஸ்டீவ் ஸ்மித்!
இதில், டாஸ் வென்ற ஆஸி, அணி முதலில் பேட்டிங் விளையாடி வருகிறது. உலகக் கோப்பைக்கு 8 நாட்கள் உள்ள நிலையில், உலகக் கோப்பை வீரர்களை ஆஸ்திரேலியா டீமில் சேர்த்தது. அந்த வகையில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலமாக அணியில் இடம் பெற்றனர்.
பாய்மர படகுப் போட்டியில் வெண்கலம்; தமிழக வீரர் விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
ஆனால், இந்திய அணியைப் பொறுத்த வரையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இடம் பெறவில்லை. சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், இஷான் கிஷான், முகமது ஷமி ஆகியோர் இடம் பெறவில்லை. முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், பும்ராவிற்கு 2ஆவது ஒருநாள் போட்டியின் போது குடும்பத்தை பார்ப்பதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இது குறித்து ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இஷான் கிஷானுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. சுப்மன் கில், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது குடும்பத்தை பார்க்க சென்றுள்ளனர். இப்போது பார்க்காவிட்டால் அடுத்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் தான் பார்க்க முடியும். அக்ஷர் படேல் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான டி20 போட்டியில் இடம் பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர் வேறு வழியின்றி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ஆசிய விளையாட்டு போட்டி டி20 அணி கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தனது குடும்பத்தோடு நேரம் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், தான் தற்போது இந்திய அணியில் 13 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதில், 11 பேர் பிளேயிங் 11ல் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இஷான் கிஷான் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்கள் உடல்நிலை பாதிப்பு மற்றும் காயம் காரணமாக பாதிக்கப்படுவது சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் 13 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக உள்ளூர் மாநில வீரர்களான தர்மேந்திர ஜடேஜா, பிரேராக் மன்காட் விஸ்வராஜ் ஜடேஜா மற்றும் ஹார்விக் தேஷாய் ஆகியோர் போட்டி முழுவதும் வீரர்களுக்கு கூல்டிரிங்ஸ் கொடுக்கவும், பீல்டிங்கின் போதும் ஆதரவாக இருப்பார்கள் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரையில் நடந்த 2 ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக இடம் பெற்று விளையாடினர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CWC 2023: உலகக் கோப்பைக்கான அணிகளை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா #WelcometoIndia!