இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் வெளியேறினார்.

மனசாட்சியே இல்லாமல் அடிச்ச ஜோஷ் இங்கிலிஸ் – 47 பந்துகளில் 102 ரன்கள், முதல் முறையாக சதம் அடித்து சாதனை!

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் உடன் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சரவெடியாக வெடிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் சென்றது. முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ஆவது 10 ஓவருக்கு ஆஸ்திரேலியா 125 ரன்கள் குவித்துள்ளது. இதில், 11 பவுண்டரியும், 7 சிக்ஸர்களும் அடங்கும். நிதானமாக விளையாடிய ஸ்மித் 41 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரெஸ்ட் எடுக்கும் பென் ஸ்டோக்ஸ் – ஐபிஎல் 2024ல் பங்கேற்கமாட்டார் என்று அறிவித்த சிஎஸ்கே, ரூ.16.25 கோடி மிச்சம்!

ஆனால், கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெற்ற இங்கிலிஸ் 10 போட்டிகள் விளையாடிய மொத்தமாக 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

கடைசியாக இங்கிலிஸ் 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 110 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் எவின் லீவிஸ் 125* ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 124* ரன்கள் எடுத்துள்ளார்.

India vs Australia: ஆஸ்திரேலியாவின் பல்லை பிடித்து பதம் பார்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பவுலிங்!

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) 113* (* - நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7 ரன்களும், டிம் டேவிட் 19 ரன்களும் எடுக்கவே ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக இந்தியாவிற்கு எதிரான முதல் இன்னிங்ஸ் டி20 ஸ்கோராக அதிகபட்சமாக 208 ரன்களை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மொஹாலியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க விளையாடியது போதும், டெல்லி அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட மணீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான்!