India vs Australia: ஆஸ்திரேலியாவின் பல்லை பிடித்து பதம் பார்க்க தயாரான டீம் இந்தியா – டாஸ் வென்று பவுலிங்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

India have won the toss against Australia in 1st T20 match at Visakhapatnam rsk

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 தொடர் என்று அடுத்தடுத்து நடந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா:

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரஷித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா:

மேத்யூ ஷார்ட், ஸ்டீஸ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன், ஹார்டி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சீன் அபாட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், தன்வீர் சங்கா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios