ரெஸ்ட் எடுக்கும் பென் ஸ்டோக்ஸ் – ஐபிஎல் 2024ல் பங்கேற்கமாட்டார் என்று அறிவித்த சிஎஸ்கே, ரூ.16.25 கோடி மிச்சம்!
உலகக் கோப்பை 2023 தொடரில் இடம் பெற்று விளையாடிய நிலையில் கூடுதல் வேலைப்பளுவை குறைக்கும் வகையில், ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சிஎஸ்கே வீரரான பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அணியில் இடம் பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால், அவர் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதில், 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், தான் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடினார். எனினும், இங்கிலாந்து லீக் சுற்று போட்டிகளுடன் வெளியேறியது.
மேலும், நீண்ட காலமாக முழங்கால் காயத்துடன் போராடி வரும் பென் ஸ்டோக்ஸ் வரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்க இருக்கும் இந்தியா உடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அதோடு தனது உடல் தகுதியிலும் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில், ஓய்வு எடுக்க இருக்கிறார்.
அதுமட்டுமின்றி வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், தனது வேலைப்பளுவை குறைக்கும் வகையிலும், உடற் தகுதி காரணமாக ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீங்க விளையாடியது போதும், டெல்லி அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட மணீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது கைவசம் ரூ.1.5 கோடி உள்ள நிலையில், அம்பத்தி ராயுடு (ரூ.6.75 கோடி) ஓய்வு பெற்றுள்ளார். தற்போது பென் ஸ்டோக்ஸூம் (ரூ.16.25 கோடி) விளையாடவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு ரூ.24.5 கோடி மீதமுள்ளது.