ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எங்கு நடக்கிறது?

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Asia Cup 2023 is scheduled from 31 August to 17 September and 4 matches in pakistan and 9 in Sri Lanka

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிரடி காட்டிய ஷிவம் சிங்; திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது. ஆனால் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதற்கெல்லாம் அசரவில்லை.

அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய ராஜ்குமார்: திருச்சி 120க்கு ஆல் அவுட்!

பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

34 ரன்கள் எடுத்த ஹாங்காங்: இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்ததாக அறிவித்தது. அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவித்தது.

பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள்:
 

பாகிஸ்தான் – நேபாள்

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் – இலங்கை

இலங்கை – வங்கதேசம்

 

இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் நடத்த ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு வர உள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்குகிறது.

4 சிக்ஸர் விளாசி நெல்லைக்கு வெற்றி தேடிக் கொடுத்த நிதிஷ் ராஜகோபால்!

இந்தப் போட்டி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடைபெறும். பாகிஸ்தான், நேபாள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாட உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தொடரை காண ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios