Asianet News TamilAsianet News Tamil

பும்ராவிற்குப் பதிலாக களமிறங்க தயாரான அர்ஜூன் டெண்டுல்கர்!

மும்பை இந்தியன்ஸ் அணியல் இடம் பெற்று விளையாடிய ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக அர்ஜூன் டெண்டுல்கர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Arjun Tendulkar to replace Jasprit Bumrah in Mumbai Indians in IPL 2023
Author
First Published Mar 29, 2023, 3:20 PM IST

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் அந்த சீசன் முழுவதும் சாதகமாக அமைந்தது. ஏனென்றால், அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டி உள்பட 12 போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கோ, 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கோ கடந்த சீசன் சாதகமாக இல்லை.

கேப்டனாக பொறுப்பேற்ற நிதிஷ் ராணா: கொல்கத்தா காளி கோயிலில் சாமி தரிசனம்!

கடந்த 15ஆவது சீசனில் மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இதே போன்று தான் சென்னை அணியும் நிலையும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. இதனால், இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், கடந்த சீசன்களின் சாதனைகள், ஹோம் மைதானம் சாதகம், நெட் ரன் ரேட் விகிதம் ஆகியவற்றின் காரணமாக சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்க பலமாக இருந்த பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இவர் இல்லாத நிலையில், அணிக்கு பக்க பலமாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவைத் தொடர்ந்து ரிச்சர்ட்சனும் விளையாடவில்லை. 

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

கடந்த சீசனில் சொதப்பிய ரோகித் சர்மா இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் இணைந்து, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் டெண்டுல்கர்: சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனாலும் இதுவரை ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை. ஆனால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுக வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த அணிகளுக்கு வாய்ப்பு ரொம்பவே அதிகம்!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், அர்ஜூன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், குமார் கார்த்திகேயா சிங், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பியூஸ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஷாம்ஸ் முலானி, ஜேஷன் பெஹ்ரெண்டாஃர்ப், நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ராகவ் கோயல், டுயன் ஜான்சென்.

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா சிங், ஹிருத்திக் ஷோகீன்

Follow Us:
Download App:
  • android
  • ios