Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: எங்களை மகிழ்விக்க சிஎஸ்கே தவறுவதில்லை; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிந்து மாதவி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நடிகை பிந்து மாதவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Actress Bindu Madhavi Wishes Rajasthan Royals Team Who won 3 Runs Difference Against Chennai Super Kings in MA Chidambaram Stadium
Author
First Published Apr 13, 2023, 1:52 AM IST | Last Updated Apr 13, 2023, 2:45 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் அரை சதம் அடித்து கொடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 30 ரன்களும், படிக்கல் 38 ரன்களும், ஹெட்மையர் 30 ரன்களும் எடுத்துக் கொடுக்க 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 50 ரன்னும், ரஹானே 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக தோனி 32 ரன்னுடனும், ஜடேஜா 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி தான் களத்தில் நின்றார். சரி, வின்னிங் ஷாட் அடித்து சிஎஸ்கே வெற்றிக்கு வழிகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

IPL 2023: கடைசில வந்து காட்டு காட்டுன்னு காட்டிய தோனி; 3 ரன்னில் தோற்று ஏமாற்றிய சிஎஸ்கே!

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னைக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நடிகை பிந்து மாதவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, எங்களை மகிழ்விக்க சிஎஸ்கே அணி தவறுவதில்லை என்று கூறியுள்ளார். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 17ஆவது போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்துள்ளார். இதே போன்று நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோரும் சென்னை போட்டியை கண்டு ரசித்துள்ளனர். இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் சென்னைக்கு வந்து போட்டியை கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

IPL 2023: மொயீன் அலி, மகேஷ் தீக்‌ஷனாவை களமிறக்கிய தோனி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சம்பவம் உறுதி!

 

ஓ இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா, கண்டதும் காதல் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios