IPL 2023: மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனாவை களமிறக்கிய தோனி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சம்பவம் உறுதி!
ராஜஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் 17ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக நடந்த முதல் போட்டியைப் போன்று இந்தப் போட்டி இருக்காது என்பதற்காக பீல்டிங் தேர்வு செய்துள்ளோம். மேலும், 2ஆவது இன்னிங்ஸ் தான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தப் போட்டியில் மொயீன் அலி மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் களமிறங்குகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட் காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் சென், சந்தீப் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஓ இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா, கண்டதும் காதல் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான்!
இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கின்றன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேராக 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 11 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023: சென்னை சேப்பாக்கத்தில் மகுடம் சூடப்போவது யாரு? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இன்று 200ஆவது போட்டியில் களமிறங்குகிறார். இதுவரையில் 199 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 120 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். 78 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது. அதோடு 4 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இன்று அவர் 17 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா 198 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் இன்று தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார். டாஸ் போடுவதற்கு முன்னதாக தோனிக்கு 200 ஆவது போட்டிக்கான நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பிசிசிஐயின் முன்னாள் தலைவரான என் சீனிவாசன், தோனிக்கு நினைவுப் பரிசு கேடயத்தை வழங்கியுள்ளார்.
மைதானம் எப்படி?
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு 160 முதல் 180 ரன்கள் அடித்தாலே அது சவாலாக ஸ்கோராக இருக்கும். ஆனால், இதற்கு முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. 2ஆவதாக ஆடிய லக்னோ அணி 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில், சென்னை அணியில் மொயீன் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பறினர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்யலாம் என்று கூறியிருந்தோம். அதன்படியே டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சிசாண்டா மகாளா, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஆகாஷ் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், த்ருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டன், குல்தீப் சென்,, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.