ஓ இதுதான் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா, கண்டதும் காதல் குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கண்டதும் காதல் குறித்தும், அழகான பெண் குறித்தும் பேசிய வீடியோ ஒன்று சமூக பவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆயிஷாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருக்கின்றனர். முதல் திருமணம் முறிவுற்ற நிலையில், தான் தவானை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் பிரிந்தனர். ஷிகர் தவான் அவ்வபோது தனது மகனை சந்தித்து வருவதோடு, 2 மகள்களையும் கவனித்து வருகிறார்.
IPL 2023: சென்னை சேப்பாக்கத்தில் மகுடம் சூடப்போவது யாரு? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?
இந்த நிலையில் தான் அவர் மீண்டும் காதலில் விழுந்ததாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவர் பேசுவது போன்று தெரிகிறது. ஒரு கேள்வி எழுப்புவதற்கு ஷிகர் தவான் பதிலளிக்கிறார். இது போன்று தான் அந்த வீடியோ உள்ளது. அப்போது தான் தவான் கண்டதும் காதல் பற்றியும், மீண்டும் காதலில் விழுந்ததும் குறித்தும் பேசியிருக்கிறார். வாழ்க்கையில் இது போன்ற அழகான பெண்ணை நான் பார்த்ததில்லை. அப்படியொரு அழகு. அந்த வீடியோவில் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று கூறும் வீடியோ தான் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.
மேலும், பேசிய அவர் என்னை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 2 நாட்களாக ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருந்தோம். இருவரது எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்கும் போது காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு முன்னேறி செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறினார். ஆனால் தவான் எந்த காதல் குறித்து பேசினார் என்பதற்கும், அவர் யாரைப் பற்ற் பேசினார் என்பதற்கும் எந்த தெளிவான விளக்கமும் இல்லை. எனினும் இந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் காதல் குறித்த உற்சாகத்தை தூண்டியுள்ளது.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.