கோலியின் மகள் பாலியல் தொடர்பான மிரட்டல் வழக்கு; கைதானவர் மீதான குற்றச்சாட்டு ரத்து - மும்பை உயர்நீதிமன்றம்!
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினரின் மகளுக்கு பாலியல் தொடர்பாக மிரட்டல் விடுத்தவர் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, தனது மதத்தின் காரணமாக கடுமையான ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஆதரவாக கோஹ்லி தானாக முன்வந்து கருத்து தெரிவித்தார். ஷமிக்கு ஆதரவாக நின்ற பிறகு அனுஷ்கா ஷர்மாவின் மகள் வாமிகாவுக்கு மிரட்டல் விடுத்து சிலர் தங்கள் வஞ்சத்தை தீர்த்து கொண்டனர். "என்னைப் பொறுத்தவரை, ஒருவரின் மதத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகவும் பரிதாபமான விஷயம்" என்று கோஹ்லி கூறினார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் அவர்களின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில், நான் ஒருபோதும், ஒருவரை அவர்களின் மதத்தின் மீது பாகுபாடு காட்ட நினைத்ததில்லை. அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் தனிப்பட்ட மற்றும் புனிதமான விஷயம். அங்கேயே விடப்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.
IPL 2023: உள்டாவா நடந்த ஐபிஎல் போட்டி ரிசல்ட்: இதுவரையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
தனிநபர்களாக நாம் என்ன செய்கிறோம், களத்தில் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது பற்றி அவர்களுக்குப் புரியாததால், மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் கோஹ்லி கூறியிருந்தார். இதனை அடுத்து கோஹ்லியை அவமதிக்கும் வகையில் அவரது குழந்தை குறித்தும் அவதூறாக பலர் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்நாகேஷ் அகுபதினி என்ற வாலிபரை கைது செயனர்.
அதன்பிறகு அவர் ஹைதராபாத் ஐஐடியில் படித்து முடித்த பட்டதாரி என்று தெரியவர, 9 நாட்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அவர், ஜே.இ.இ. தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர் என்றும், வெளிநாடு வேலைக்கு செல்ல தனது மீதான வழக்கு தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், தான் வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலைக்கு செல்ல இருப்பதால், இந்த எஃப் ஐ ஆர் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த வழக்கை ரத்து செய்ய விராட் கோலியின் மேலாளர் டிசோசா மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ராம்நாகேஷை அகுபதினியை இந்த வழக்கிலிருந்து மும்பை உயர்நீதிமன்றம் விடுவிடுத்து உத்தரவிட்டது.
IPL 2023: கேட்சையும் கோட்டை விட்டு, முகத்திலும் அடி வாங்கி காயமான சூர்யகுமார் யாதவ்!