IPL 2023:19ஆவது ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா: மனைவியுடன் வீடியோ காலில் வெற்றியை பகிர்ந்த அழகிய தருணம்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 19ஆவது ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா
பிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்தது. 2 அணிகளுமே இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ரோகித் சர்மா
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒருமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நிற்க, மறுமுனையில் பிரித்வி ஷா(15), மனீஷ் பாண்டே(26), யஷ் துல்(2), ரோவ்மன் பவல்(4), லலித் யாதவ்(2) ஆகியோர் சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு வார்னருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
ரோகித் சர்மா
வார்னர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக அடித்து ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல், 25 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசினார். வார்னர் 47 பந்தில் 51 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
ரோகித் சர்மா
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல தொடக்கம் கொடுத்தது. தவறான புரிதல் காரணமாக, இஷான் கிஷான் 31 ரன்னில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் குவித்துள்ளார். ஒருபுறம் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா
ஒரு புறம் ஜெயிப்போமா, மாட்டோமா என்ற குழப்பத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு கடைசி பந்தில் வெற்றி கிடைத்தது. டிம் டேவிட் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
ரோகித் சர்மா
இந்த வெற்றியைத் தொடர்ந்து ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா பெறும் 19ஆவது ஐபிஎல் ஆட்டநாயகன் விருது இதுவாகும். முதல் வெற்றி, முதல் அரைசதம், முதல் பிளேயர் ஆஃப் தி மேட்ச். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா 19 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். தோனி 17 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். யூசுப் பதான் 16, கோலி மற்றும் ரெய்னா ஆகியோர் 14 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.