MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆன நிலையில் மோசமான சாதனை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 13 2023, 01:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாஅ 17ஆவது போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். 

29
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 10 ரன்னும், தேவ்தத் படிக்கல் 38 ரன்னிலும், சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரையில் 8 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன்னதாக ஷேன் வார்னே மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் 7 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளனர். அஜிங்க்யா ரஹானே 5 முறை ஆட்டமிழந்துள்ளார்.

39
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தன் பங்கிற்கு சென்னை வீரர்களை கதி கலங்கச் செய்தார். அவர், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜுரெல், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

49
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் 2 விக்கெ கைப்பற்றியதன் மூலமாக டி20 பார்மேட்டில் தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மொயீன் அலி ஒரு விக்கெட் கைப்பற்றினார். சிறப்பாக ஆடுவார் என்று களமிறக்கப்பட்ட மகேஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. 

59
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இதையடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே ஒரு காட்டு காட்டினார். அவர் 19 பந்துகளில் ஒரு சிக்சர் 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

69
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ஷிவம் துபே வந்த வேகத்தில் 8 ரன்களில் வெளியேறினார். இதே போன்று மொயீன் அலியும் 7 ரன்னில் வெளியேற, மகாளாவிற்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வந்த அம்பதி ராயுடு 1 ரன்னில் வெளியேறினார். நிதானமாக ஆடிய டெவான் கான்வே 50 ரன் எடுத்த நிலையில் சகால் பந்தில் ஆட்டமிழந்தார்.

79
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் எம் எஸ் தோனி இருவரும் ஜோடி சேர்ந்து கடைசியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கதி கலங்கச் செய்தனர். இருவரும் சரவெடியாக வெடித்தனர். 

89
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இது தோனியின் 200ஆவது போட்டி என்பதால் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஒவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். 

99
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

எனினும், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி வின்னிங் ஷாட் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
சஞ்சு சாம்சன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
PSL சர்ச்சை.. பந்தை சேதப்படுத்திய பாகிஸ்தான் வீரருக்கு 2 போட்டிகள் விளையாட தடை!
Recommended image2
CSK vs RR: வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. சஞ்சு சொதப்பல்.. சிஎஸ்கேவை ஊதித்தள்ளிய ராஜஸ்தான்!
Recommended image3
IPL 2026: அனுபவம் வாய்ந்த வீரர்களின் அதிரடி வேட்டை; கோலியின் 'கன்சிஸ்டன்சி, ரோகித்தின் வரலாற்றுச் சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved