3 இட்லி அல்லது 3 ரொட்டி அல்லது 3 தோசை வைத்து உணவு பரிமாறுபவரா நீங்கள்..?
மூன்று என்கிற எண் வரிசை மீது பலருக்கும் விருப்பம் இருப்பது கிடையாது. எந்தவொரு நல்ல காரியத்திலும் மூன்று எண்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் கூறுவர். சாப்பிடும் போது மட்டும் 3 இட்லி, 3 தோசை, 3 ரொட்டி என்கிற வரிசையில் யாருக்கும் சாப்பாடு கொடுக்கக்கூடாது
ஏதேனும் நல்ல காரியத்துக்கு மூன்று பேர் சேர்ந்து போகக் கூடாது என்று எண்ணி, வலுக்கட்டாயமாக நான்காவது நபரை பலரும் அழைத்துச் செல்ல பார்த்திருப்போம். அதேபோன்று ஒரு கெட்டக் காரியத்துக்கு கூட 3 பேராக போகக்கூடாது என்று பலரும் நினைப்பதுண்டு. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒரே நேரத்தில் மூன்று சாக்லேட் கொடுக்கும்போது, மூன்று வேண்டாம், இன்னும் ஒன்றை கொடுங்கள் என்பார்கள். அதனால் மூன்று என்பது சகுனத்தடை கொண்ட எண்ணாக கருதப்படுகிறது. ஜோதிடம் மற்றும் வாஸ்து ஆகியவற்றிலும் மூன்று தடை செய்யப்பட்ட எண்ணாகவே கருதப்படுகிறது. இதுதொடர்பான மேலும் பல தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
மூன்று பொருட்களுடன் தட்டில் பராமரிக்கக்கூடாது
இந்து மதத்தில், ஒரு தட்டில் மூன்று ரொட்டிகளை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஒரு தட்டில் மூன்று ரொட்டி வைப்பது இறந்தவரின் உணவாக கருதப்படுகிறது. உயிருடன் இருப்பவருக்கு ஒரு தட்டில் மூன்று ரொட்டிகள் கொடுக்கக்கூடாது. ஒருவர் இறந்த 13வது நாளில், ஒரு தட்டில் ஒன்று அல்லது மூன்று ரொட்டிகள் வைக்கப்பட்டு இறந்தவருக்கு வழங்கப்படும் மரபு இந்து மதத்தில் பின்பற்றப்படுகிறது.
பகை வரும்
மூன்று ரொட்டிகளை ஒரே நேரத்தில் கொடுத்தால், கொடுத்தவருக்கும், பெற்றவருக்கும் நல்லதல்ல. இருவருக்குள்ளும் பகை வளர்கிறது. ரொட்டி மட்டுமல்ல, மூன்று பொருட்களையும் ஒன்றாகக் கொடுக்க வேண்டாம். இது இருவருக்கும் இடையே எதிர்மறை எண்ணங்களை வளர்த்தெடுக்கிறது.
ஆயுள் குறையும்
சாஸ்திரங்களின்படி, ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று ரொட்டி கொடுக்கக்கூடாது. இது உணவை வாங்கிக்கொள்ளும் நபரின் ஆயுளைக் குறைத்துவிடுகிறது. அதேசமயத்தில் அந்த உணவை சாப்பிடுபவரின் ஆயுளும் பாதிக்கப்படுகிறது. எனவே ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று ரொட்டியை கொடுக்காதீர்கள்.
அபசகுணமான எண்
இந்து மதம் சார்ந்த பல்வேறு சாஸ்திரங்களில் மூன்றாவது எண் அபசகுணம் கொண்டதாகவே கூறப்படுகிறது. இறைவனுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய அல்லது மிகவும் பிடித்தமான பொருளை வழங்கும் போது, மூன்று என்கிற வரிசையில் கொடுக்ககூடாது. அதேபோன்று இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளிலும் மூன்று வரிசையை கடைப்பிடிக்கக்கூடாது.
புத்தாண்டில் பணக் கஷ்டம் தொடராமல் இருக்க இதைச் செய்யுங்க போதும்..!!
மனப் பிரச்னை
ஒரே நேரத்தில் தட்டில் மூன்று ரொட்டிகளைச் சாப்பிடுவதால் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும். மூன்று ரொட்டி சாப்பிடுவது தவறில்லை. முதலில் ஒரு தட்டில் இரண்டு ரொட்டிகளை வைத்து சாப்பிடவும். பின்னர் ஒரு ரொட்டி சேர்ப்பது நல்லது என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றன.
அறிவியலும் உள்ளது
சாப்பாட்டுத் தட்டில் 3 ரொட்டி பரிமாறக் கூடாது என்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. 3 ரொட்டிகளை வழங்குவதற்கு அறிவியலும் ஒரு வகையில் காரண தான். அதாவது இரண்டு ரொட்டி, சப்ஜி, பருப்பு, தயிர் மற்றும் சாதம் ஒரு முறை சாப்பிட்டால் நம் வயிற்றுக்கு போதுமானது. இரண்டுக்கு மேல் உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.